திணைக்களங்களில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

Thursday, February 8th, 2018

வடக்கு மாகாணத் திணைக்களங்களில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயிற்சிக் கால உத்தியோகத்தர்களாக தகுதியானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 58 ஆவது அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது –

வடக்கு மாகாணத் திணைக்களங்களின் கீழ் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 309 இல் 52 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. உள்ளுராட்சி சபைகள் 26, வீதி அபிவிருத்தி திணைக்களம் 3, கல்வித் திணைக்களம் 6, நீர்ப்பாசனத் திணைக்களம் 16, சுகாதார சேவைகள் திணைக்களம் 1 உட்பட 52 வெற்றிடங்கள் உள்ளன.

தேவையின் நிமித்தம் நிரந்தரமாக உத்தியோகத்தர்கள் நியமனம் செய்யும் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். அல்லது 50 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு பயிலுனராக உள்வாங்கி ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும். பயிலுனர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: