திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, January 9th, 2022
எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் திங்கட்கிழமைமுதல் ஒரு மணித்தியாலம்முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையினை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் வழங்கப்படாமை மற்றம் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கைக்கு எலிசபத் மகாராணி, பிரதமர் மோடி வாழ்த்து!
இன்றுமுதல் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நடைமுறை!
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்...
|
|
|


