21வயதுக்குட்பட்டோருக்கு புகையிலைப் பொருள் விற்ற வர்த்தகர்களுக்குத் தண்டம்!

Thursday, January 12th, 2017

21வயதுக்கு குறைந்தவர்களுக்கு புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கும், பாவனையாளர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கும் சாவகச்சேரி நீதிவான் மன்று நேற்றுத் தண்டம் விதித்துள்ளது.

சாவகச்சேரியில் 21 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குப் புகையிலை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் 8 பேருக்கு எதிராகச் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் சாவகச்சேரி நீதிவான் மன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தானர்.

வழக்குகள் விசாரணைக்கு தனித்தனியாக எடுக்கப்பட்டபோது, அவர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்குத் தலா 4ஆயிரம்ரூபா தண்டம் விதிக்கப்பட்டது யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தென்மராட்சிப் பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களில் நடத்திய திடீர் பரிசோதனைகளில் பொருள்களின் விலைகளை அதிகரித்து விற்றமை, திகதி காலாவதிளான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக அப் பிரதேசத்தைச் சேர்ந்த 9 வர்த்தகர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிவான் மன்றில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். வழக்கில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்குத் தலா 9ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டது.

cigarettes

Related posts: