தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இலிருந்து சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் இன்று (18.03.2024) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கப்பல் 1131 பயணிகள் மற்றும் 565 பணியாளர்களுடன் கப்பல் நாட்டுக்கு வருகைதந்துள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாட்டு பயணிகள் வருகைதந்துள்ளனர்.
கப்பலில் வருகைத்தந்த பயணிகள் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு செல்லவுள்ளனர். இந்த கப்பல் இன்று இரவு மாலைத்தீவு நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலைப் பேருந்து சேவைகளில் நேரமாற்றம்!
இலங்கையர்களின் காயங்களை நீதியால் குணப்படுத்த முடியும்- சர்வதேச மன்னிப்புச் சபை!
எமது நிலையறிந்து இறக்குமதி தடையை நீக்குங்கள் - அகில இலங்கை இருசக்கர வாகன உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
|
|