தாயின் கவனயீனத்தால் குழந்தை பரிதாபப் பலி!

Monday, October 10th, 2016

தாயின் கவனயீனத்தால் பிறந்து 45 நாட்களான,சிவச்செல்வன் கேசவி என்ற பெண் சிசு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம், சனிக்கிழமை மாலை (08) நாவாலி தெற்கு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு பால் கொடுத்த தாய், ஏணையில் போட்டு விட்டு தனது வேலைகளை கவனித்துள்ளார்.

ஏணையில் போடப்பட்டிருந்த துணி, காற்று காரணமாக பிள்ளையின் முகத்தின் மீது தவறுதலாக வீழ்ந்துள்ளது. வேலைகளை முடித்துவிட்டு வந்த தாய், குழந்தையை தூக்கிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிசுவை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினார்.

thumb_large_neely-wang-marin-newborn-photography-12

Related posts: