டொரே ஹேடர்ம் இலங்கை வருகின்றார்.!

Monday, May 30th, 2016

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

அவர் நாளையதினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார். இதன்போது, அவர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும், அறிவித்துள்ளது.

அதேவேளை, அவர் ஜீன் 01 ஆம் திகதி வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜீனோல்ட் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நல்லிணக்க வழிமுறைகள் செயலகத்தின் தலைவரான மனோ தித்தவெல்லவையும் சந்த்தித்து கலந்துரையாடவுள்ளார். நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம்  2007ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, இலங்கையில் நோர்வே தூதுவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: