தாதியர் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது!
Sunday, March 20th, 2016
யாழ்.போதனா வைத்தியசாலை ஆண் தாதியர் ஒருவரை யாழ்.பொலிஸார் விசாரணைக்கென்று அழைத்துச் சென்று கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஊழியர்களினாலும் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்றும்(19) தொடர்ந்து இடம்பெற்றது.
உண்மையான குற்றவாளியை விடுத்து தவறு செய்யாதவரை பொலிஸார் கைது செய்தமை தவறானது எனவும், தாதியருக்கு எதிராக முறைப்பாடு செய்தவர் கைது செய்யப்படுவதுடன், அவர் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதுவரை தமது பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் தாதியர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தாதியர் சங்க கோரிக்கைக்கு அமைய குறித்த நபர் பகிரங்க மன்னிப்பு கோரியதையடுத்து நேற்று சனிக்கிழமை மாலை 4.00 மணியுடன் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதுடன் பணிகள் வழமைக்கு திரும்பின.
Related posts:
பல்கலை. கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்
31வது ஒலிம்பிக் பிரேசிலில் நாளை கோலாகலமாக ஆரம்பம்!
மகிந்த ஆதரவுகாரணமாக அமைச்சர் பதவியிழப்பு!
|
|
|


