தற்கொலை அங்கி மீட்பு விவகாரம்: இருவர் விடுதலை!

Thursday, September 8th, 2016

சில மாதங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருவரையும் நேற்று (7) நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரின் வழக்குகள் இன்றைய தினம் கொழும்பு பிரதம நீத வான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவர்களில் சாவகச்சேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையும் இடம்பெற்றது.

குறித்த வழக்கு விசாரணையில் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, ஏனைய நால்வரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1454-1-0485fced261a39954fb58e8f2030c38d

Related posts: