தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆபத்து – அருட் தந்தைசக்திவேல் !
Tuesday, October 10th, 2017
தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து தாம் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட் தந்தைசக்திவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
அரசியல் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது “உங்களைசுட்டுக்கொல்ல வேண்டும்” என்று பாதுகாப்பு பிரிவினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும்சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும்வகையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அருட்தந்தை கூறினார்.
Related posts:
மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது - இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை!
ஆளுநரின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தவறும் தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை - ...
நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை - பொலிஸாரை நம்பிய சமூகம் ...
|
|
|


