தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். சட்டரீதியாக விலகிக்கொள்வதற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக்காலம் முடிவடைந்துள்ளது.
பொது மன்னிப்புக் காலமானது கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதியில் இருந்து அமுலில் இருந்த போது 11,232 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலகிக்கொண்டுள்ளனர். இவர்களில் 15 அதிகாரிகளும், 9 கெடேட் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர். இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மேலும் 26,000 பேரை கைதுசெய்ய இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவச...
நுகர்வோர் அதிகார சபைச் சட்டத்தில் திருத்தம் : தண்ட பணத்தை 300 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை...
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய...
|
|