தனியாருக்கும் பகிரப்படும் கொழும்பு துறைமுகம்?

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 51 சத வீத பங்குகளை அரசாங்கம் வைத்துக் கொண்டு ஏனைய பங்குகளை தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் துறைமுக அதிகாரசபை மீது சுமத்தியுள்ள பெரும் கடன் சுமையே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். பங்குகளை விற்பனை செய்ய சிறந்த முதலீட்டாளரை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் துறைமுகத்தின் முழு நடவடிக்கை கட்டமைப்பும் பாதிப்புக்கு உள்ளாகும் என துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனை செய்யும் முடிவை கைவிடாது போனால், பாரிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக சங்கத்தின் செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழில் பச்சை மிளகாய் அதிக விளைச்சல்!
வெளவால் கடிக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் ‘தெய்வீக கிராமம்’ நிகழ்வு!
|
|