தண்டப்பணம் விதிப்பது தொடர்பில் இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Tuesday, November 15th, 2016

சொகுசு வாகனத்துக்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக அறவிடுமாறும், இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   வாகனங்களுக்காக ஆகக் குறைந்த தண்டப்பணமாக 2,500 ரூபாய் அறவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த வருமான பெறுகின்ற சாரதிகளை இன்னுமின்னும் துன்பத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். ஆகையால், அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின், மேற்குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் சைக்கிள் காரர்கள் மாதமொன்றுக்கு, எரிபொருளுக்காக செலவிடும் தொகையை விடவும், தண்டப்பணம் அதிகமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறிழைக்கும் சாரதிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணமானது, வாகனங்களின் பெறுமதிக்கேற்ப அறவிடப்படவேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அதன்பிரகாரம், 100 சீ.சி-க்குக் குறைவான வாகனங்களுக்கு 30 சதவீதமும், 100 சீ.சி-க்குக் கூடுதலான வாகனங்களுக்கு 50 சதவீதமும், சொகுசு வாகனங்களுக்கு 100 சதவீதமும் தண்டப்பணம் அறவிடப்படவேண்டும் என்றும் அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

3-17

Related posts: