தடைசெய்யப்பட்ட மருந்து வேறு பெயரில் சந்தைக்கு?

Tuesday, January 17th, 2017

இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள க்லைபொஸ்பேட் இரசாயனக் கிருமிநாசினி மருந்து வேறோரு பெயரில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரக நோய்ப் பாதிப்பால் இந்த க்லைபொஸ்பேட் இரசாயனக் கிருமிநாசினி மருந்து தடைசெய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த மருந்து வேறோரு பெயரில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற கிருமிநாசினிப் பாவனை மற்றும் வேறு பல காரணங்களால் நாளாந்தம் 4 தொடக்கம் 6பேர் வரை மரணிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்தக் கிருமி நாசினி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

poison-bottle1

Related posts: