தடுப்பூசி திட்டத்தில் முறைகேடு: விசாரணை நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

கொரோனா தடுப்பூசி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கைய முன்வைத்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமார் 800 முதல் ஆயிரம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டமை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பூசியின் அளவு தவறாக கையாளப்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் இந்த விடயத்தில் தொழில்நுட்ப ரீதியான வழிகாட்டல்கள் தவறான முறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!
வீதியால் சென்றவர்களுடன் சேஸ்டையில் ஈடுபட்ட இளைஞனுக்கு விளக்கமறியல்!
கிரிக்கட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொல்பொருளியல் திணைக்களம்!
|
|