டெங்கு பரவும் சூழல் 50 பேருக்குத் தண்டம்!

நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் விதமாகச் சூழலை வைத்திருந்த 50 பெருக்கு யாழ்.நீதிவான் மன்று 75ஆயிரம் ரூபா தண்டம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாண பகுதியில் மற்றும் நகரத்தைச் சூழவுள்ள பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையப் பிரிவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் விதமாகச் சூழலை வைத்திருந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு iது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரினால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் நீதிமன்றில் முற்படுமாறு திகதியும் வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் தொடர்பான வழங்குகள் நீதிமன்றில் விசாரணக்கு எடுக்கப்பட்டன. நீதிமன்றில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் 500ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. வழக்குத் தவணைக்கு நீதிமன்றுக்கு சமுகமளிக்காத 6பேருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
Related posts:
|
|