டெங்கு நோய்க்கான மருந்து வகைகளில் பற்றாக்குறை!

Saturday, June 3rd, 2017

டெங்கு நோய் தீவிரமடைகின்ற போது நோயாளர்களின் உயிராபத்தை தவிர்ப்பதற்கான டெக்ஸ்ட்ரன் ‘(Dextran) என்று மருந்து வகையில் பாரிய பற்றாக்குறை நிலவுவதால் நோயாளர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர். தற்போது சுகாதார அமைச்சுக்குள் இருக்கின்ற இந்த மருந்துகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதுடன், அவை நோயாளர்களுக்கு பரிந்துரை செய்வதற்கு தகுதியற்றது என்று வைத்தியர்கள் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வௌ்ள நீர் வடிந்தோடிக் கொண்டிருக்கும் நிலையில் முக்கிய சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், டெங்கு நோய் இதில் முக்கியமானதென்றும் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலிந்த சில்வா கூறியுள்ளார்.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போது தேவைப்படுகின்ற ஒத்துழைப்புக்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்குவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தற்போதைய அனர்த்த நிலமையில் விஷேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய வைத்திய முகாம்கள் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அந்த சங்கம் கூறியுள்ளது.

Related posts:


நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோ...
தவறிழைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தண்டனையளிக்க ஏற்பாடு - புதிய சட்டமூலம் அமைச்சரவைக்கு அனுப்...