டெங்கு நோயை ஒழிக்கும் நாடளாவியரீதியல் மூன்று மாதகால செயற்றிட்டம் ஆரம்பம்.
Thursday, June 1st, 2017
டெங்கு நோயை முற்றாக ஒழிக்கும் வகையில் நாடளாவியரீதியல் மூன்று மாதகால செயற்றிட்டம் இன்றைய நாளிலிருந்துஆரம்பமாகின்றது.
டெங்கு ஒழிப்புதொடர்பான மூன்றுமாதவிசேடநிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதிசெயலகத்துடன் இணைந்துசுகாதாரஅமைச்சும் முன்னெடுக்கும் இச்செயற்றிட்டத்துக்கு கல்வியமைச்சு ,சுற்றாடல் அமைச்சு,பாதுகாப்புஅமைச்சு,உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சு, நீதி மற்றும்சமாதான அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிஅமைச்சு,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, வெகுசனஊடகஅமைச்சுஆகியன இணைஅனுசரணைவழங்கவுள்ளன.
இன்றுதொடங்கும் இந்நிகழ்ச்சித் திட்டமானது ஆகஸ்ட் மாதம் வரையில் நாடளாவியரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. நாடெங்கும் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தம் முகமாக அனைத்து இல்லங்கள்,அரசநிறுவனங்கள்,பாடசாலைகள,கட்டிடங்கள் உள்ளடங்கலானசகல இடங்களிலும் டெங்குநோய் விழிப்புணர்வுசெயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதிவெள்ளிக்கிழமை தோறும் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான பங்களிப்பினை வழங்கவேண்டுமென்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்கண்டு சுத்தம் செய்வதனூடாகவே எதிர்காலத்தில் உயிர்கொல்லி நோயான டெங்கு நோயை முற்றாக ஒழிக்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


