டெங்கு தாக்கம் அதிகரிப்பு: 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு!
Saturday, March 18th, 2017
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்த 96 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் யாழ்.பொலிஸாரால் 390 வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 96 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!
எரிவாயு சிலிண்டர்களை மீள கையேற்பது தொடர்பில் அவதானம்!
இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள் 22% இனால் அதிகரிப்பு - குறைந்த கட்டணமும் 40 ரூபாவாக நிர்ணயம்...
|
|
|


