டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

பேருவலை தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கை பேருவலை கரையோர பூங்கா மற்றும் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த படகுகள் காணப்பட்ட இடத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.மீன் பிடி படகுகளில் நீர் சேர்வதன் காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்தமையால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின போது வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து கவனம் செலுத்தப்பட்டு டெங்கு நுளம்பு அபாயம் காணப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுது.
Related posts:
தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்!
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு!
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
|
|