டில்ஷானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Tuesday, April 25th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றில் டில்ஷான் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திலகரட்ன டில்ஷானுக்காக ஒருவரும் ஆஜராகாமையினால் குறித்த வழக்கிற்காக பணம் செலுத்தும் நடவடிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Related posts:
யாழ்.மாவட்ட மட்ட கராத்தே சுற்றுப்போட்டி!
யாழ். மாவட்டத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
பேலியகொடை கொரோனா கொத்தணி பணத்தாளினூடாக பரவியது - சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
|
|
|


