டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம்!

இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்துவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒன்று விவசாயத்துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான மென்பொருளை அறிமுகப்படுத்துவதாகும்.
விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக ஏழு அமைச்சுக்களிடமிருந்து உரிய தரவுகள் பெறப்பட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. புதிய மென்பொருள், உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை நேரடியாக அளவிடுவதற்கும், கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாப்பதற்கும் தேவையான வழிகாட்டுதலை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டமாகவும் இது அமையும்.
இலங்கையின் விவசாய அபிவிருத்திக்காக 250 மில்லியன் டொலர்கள் மானியமாக இத்திட்டத்தின் மூலம் பெறப்பட்டு விவசாயத் துறையில் தரவுகளை சேகரித்து நெல் மற்றும் ஏனைய பயிர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதே இதன் முதன்மை நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|