ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் இன்றும் கலந்துரையாடல்கள் !

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு தொடர்பில், இன்றையதினமும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேநேரம் நேற்றையதினமும், குறித்த கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி, நேற்றையதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் நேற்றைய தினம் அந்தத் தீர்மானம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும், ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கமைய, ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|