ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க!
Thursday, June 8th, 2017
முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க முற்பகல் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலைக்கு சொந்தமான பெறுமதியான இயந்திர சாதனங்களை வெட்டி, பழைய இரும்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் கட்டமாகவே வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக தயா ரத்நாயக்க இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கநடவடிக்கை
நீதிபதிமீதான துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் தொடர்ந்தும் சிறையில் !
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ...
|
|
|


