இலங்கைக்கு பல்வேறு பயிற்சிக் கருவிகளை வழங்கியது இந்தியா!

Tuesday, March 16th, 2021

2019 ஆம் ஆண்டில் இந்திய கடற்படைத் தளபதியால் ‘இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையே நட்புறவை விருத்தி செய்வதற்காக” இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நேற்றைதினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி இந்திய கடற்படையினால் வழங்கப்படும் என கூறப்பட்ட, டொபிடோ மற்றும் கேஸ் டர்பய்னக் கருவி உட்பட (Gas Turbine Cut Modules) பல்வேறு பயிற்சிக் கருவிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக் கடற்படையிடம் கையளித்துள்ளார்.

திருகோணமலைக்கு நேற்று விஜயம் செய்த அவர், அங்குள்ள இலங்கை கடற்படையின் கடல்சார் கல்வி ஆய்வகத்தில் வைத்து கிழக்கு மாகாண கடற்படை நிறைவேற்று கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் வைரஸ் ஜயரத்னவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்பீர் சிங் கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கைக் கடற்படைக்கு இப்பொருட்களை வழங்குவதாக உறுதி அளித்திருந்த நிலையில் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

000

Related posts: