ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானம்!.
Wednesday, July 26th, 2023
ஜனாதிபதியின் சிறப்புரிமைகளுக்கு அமைய மாத்திரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, 3 வாகனங்கள், தேவையான அளவு எரிபொருள் மற்றும் தனிச் செயலாளர் போன்ற விடயங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், ஏற்கனவே உள்ள அரசாங்கங்களின் திருத்தங்களின் அடிப்படையில் வெவ்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
இந்தநிலையில், ஜனாதிபதியின் சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம் மாத்திரம் நிலைமையை சரிசெய்து வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு வேறு பதவிகளுக்கு நியமிக்கப்படுவதால் சில சிறப்புரிமைகள் மாறலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


