ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.
இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
தற்போது முதல் முற்பகல் 11.30 வரையில் வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் 2மணி வரையில் இராஜகிரிய உள்ளிட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள், விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டாக்காவில் முன்னாள் ஜனாதிபதி உரை!
கொரோனா கோரத் தாண்டவம் - உலக நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அழைப்பு!
மக்கள் தொகையில் வீழ்ச்சி - யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற ஆசனமொன்று குறைக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழ...
|
|
|


