ஜனவரியில் பாரிய அரசியல் மாற்றம்? – முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம!

எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் முன்னொரு காலத்தில் இடம்பெற்ற மஹிந்த ராஜபக்ஸவின் கெட்ட காலம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இவர்கள் மேலும் தங்களுடைய ஆட்சியை ஐந்து வருடங்களுக்கு அதிகமாக இருந்திருக்க முடியும், அவர்களின் கெட்டகாலம் அது இடம்பெறவில்லை என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கெட்டகாலம் நிறைவுக்கு வந்துள்ளது, எனினும் 19ஆம் சீர்திருத்தில் என்னென்ன திருத்தங்கள் கொண்டுவந்தாலும் ஜனவரியில் அரசியல் மாற்றம் ஏற்படும் கட்டாயம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் நியமனங்களை உடன் நிறுத்தி வையுங்கள்!
ஏப்ரல் 21 தாக்குதல் : உள்நாட்டு வெளிநாட்டுத் தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன - அமைச்சர் கலாநிதி...
தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!
|
|