சைட்டத்தை நிராகரித்ததற்கு பிரிட்டிஷ் மருத்துவ சபை விளக்கம்!

Wednesday, September 20th, 2017

சைட்டம் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டங்களை ஏற்றுக்கொள்ளாமை தொடர்பாக பிரித்தானிய மருத்துவ சபை விளக்கமளித்துள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரி இலங்கையில் இயங்கும் காரணத்தால் அதன் மருத்துவப் பட்டங்கள் இலங்கை மருத்துவ சபையினால் அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் மாத்திரமே சர்வதேச ரீதியில் இந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் மருத்துவத் தகுதி ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், இலங்கை மருத்துவ சபை சைட்டம் கல்லூரியின் மருத்துவப் பட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே பிரித்தானிய மருத்துவ சபையும் அதனை அங்கீகரிக்காதுள்ளது.

இத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் இலங்கை மருத்துவ சபையிடம் அனுமதி பெறப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய மருத்துவ சபை அறிவித்துள்ளது.

Related posts: