செய்தி வழங்கும் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்த சிவஞானம்!

Friday, October 27th, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்கக் கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 108 ஆவது அமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்..

வடக்கு மாகாணசபையின் நிதியை வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எடுத்து வைத்திருந்தார். மாகாணசபையினரின் நீண்டநாள் கோரிக்கையின் பின்னர் அந்த நிதி திரும்ப மாகாணசபைக்குக் கிடைத்தது. கிடைத்த 144 மில்லியன் ரூபாவை மாகாண அமைச்சுக்கள் தலைமைச் செயலருடன் கலந்துரையாடி தமது திட்டங்களை முன்வைத்து மாகாணசபையின் அனுமதியைப் பெற்று பயன்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது.

அண்மையில் ஒரு சில அதிகாரிகள் இதனை விளங்கிக் கொள்ளாது தவறான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் சில உள்நோக்கத்துடனேயே செயற்பட்டுள்ளனர். அதிகாரிகளை ஊடகங்களுக்கு செய்தி வழங்குமாறு கூறியவர்கள் யார்? எந்தவொரு அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கு செய்தி வழங்க அதிகாரம் இல்லை. வழங்கவும் கூடாது எனச் சீற்றம் அடைந்தார்.

இதேவேளை ஆளுநர் நிதி மாகாணசபைக்குக் கிடைக்கப்பெற்று ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்று வரை அவை செலவளிக்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: