செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளூட்சித் தேர்தலை நடத்த முடியும் – தயாராகி வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

தேர்தல் சட்டத்திற்கு உட்பட்டு, இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதிமுதல் 6 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அவற்றின் புதிய பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் அதற்கு முன்வரும் ஆறு மாத காலத்திற்குள் உள்ள திகதி ஒன்றில் இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் 20 க்கும் 2023 மார்ச் 20 க்கு இடைப்பட்ட திகதி ஒன்றில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.எனினும் நடப்பு பொருளாதார நெருக்கடிக்குள் இது சாத்தியமா? என்பதை அவர் கூறவில்லை.
இதேவேளை உள்ளுாராட்சி தேர்தலை ஒத்திவைக்கபோவதில்லை என்று முன்னதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னதாக அறிவித்திருந்தார்.
எனினும் தேர்தல்களை நடத்த இது உகந்த காலம் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
முன்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் புதிய நடைமுறையில் நடைபெற்றமை குறிப்பி்டத்தக்கது.
Related posts:
|
|