சூழ்ச்சிகளுக்கு அடிபணியாத ஜனாதிபதி- திஸ்ஸ விதாரண!
 Monday, July 4th, 2016
        
                    Monday, July 4th, 2016
            
அழுத்தங்களை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கிக்கு சிறந்த ஆளுனரை நியமித்துள்ளார். எனவே எதுவித சூழ்ச்சிகளுக்கும் அடிபணியாத ஜனாதிபதியின் அரசியல் போக்கு வரவேற்கதக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் எமது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட அழுத்தங்களிலும் மாற்றம் இல்லை. மாறாக அந்த அழுத்தங்கள் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொரல்லை என்.எம்.பேரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சோசலிஷ மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
லசந்தவின் கொலை தொடர்பில் மேலும் 12 பேரிடம் வாக்குமூலம்!
யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் - நிதி இர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        