சுன்னாகம் சந்தையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 700 கிலோ மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிப்பு!
Tuesday, September 26th, 2023
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோகிராம் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த தொகை மீன்கள் நேற்றையதினம் அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதிகாரிகளினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அழுகிய மற்றும் நச்சு இரசாயனம் கலந்த மீன்கள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகாரிகளினால் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், குறித்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பேருந்துக் கட்டண அதிகரிப்பு: அமைச்சரவையில் கலந்துரையாட தீர்மானம்? - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வ...
நல்லாட்சியால் ஏமாற்றப்பட்ட வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் போராட்ட...
ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள்...
|
|
|


