தத்துக் கொடுக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை அறியும் வேலைத்திட்டம் அரம்பம் !

Saturday, November 25th, 2017

ஐரோப்பிய நாடுகளுக்கு பல வருடங்களுக்கு முன்னர் தத்துக் கொடுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சிறார்களின் உண்மையான பெற்றோரை கண்டறியும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர், இதுதொடர்பில் நெதர்லாந்தின் தொலைகாட்சி ஒன்றுக்கு தகவல் வழங்கி இருப்பதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் 4 ஆயிரம் சிறார்கள் வரையில் இலங்கையில் இருந்து நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் தங்களின் உண்மையான பெற்றோரை அறிந்துக் கொள்ள வேண்டியத் தேவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நெதர்லாந்து தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related posts:


சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநா...
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 10 ஆம் திகதிவரை விண்ணப்பி...
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை!