சுகாதார தொழிற்சங்கங்களுடன் ராஜித பேச்சுவார்த்தை!

Thursday, November 23rd, 2017

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் 22 ஆம் திகதி காலை 07.00 மணி முதல், 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related posts:


பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி - 50 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகிய...
3 ஆயிரத்தை நெருங்கியது சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் – கோதுமை மா, சிமெந்தின் விலைகளும் நள்ளிரவுமு...
குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவடைவு - கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்திரல் டி சில்வா ...