சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !

Friday, July 15th, 2016

தற்போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி நீக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்த வரி வித்திப்பு மேற்கொள்ளப்படும். அதில் மதுபானங்கள், சிகரட், சீனி அதிகமாக உள்ள பொருட்கள், உப்பு என்பவற்றிற்கு வரி அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மேலும் சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும். இரத்த பரிசோதனைக்கான வரி நீக்கப்படுவதுடன், புற்றுநோய்க்கான மருத்துவ வரியும், ஆயுர்வேத மருத்துவ வில்லைகளின் விலை குறைக்கப்படடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நேற்று தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்-

இதுவரை காலம் எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத சுகாதார சேவைகளை இந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. சுகாதார சேவைக்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு அடுத்த படியாக சுகாதார துறைக்கும் கல்விக்குமே அதிகளவான நிதியை ஒதுக்கியுள்ளது. அதேபோல் சர்வதேச சுகாதார அமைப்புகளினதும் நாடுகளின் முக்கிய சுகாதார நிறுவனங்களினதும் முழுமையான ஒத்துழைப்புகள் எமக்கு கிடைக்கின்றது. இன்று சர்வதேச நாடுகள் 45 சதவீத நிதி ஒதுக்கீட்டை எமக்கு வழங்குகின்றனர். இன்று தொற்றா நோய்கள் இல்லாத நாடாக சர்வதேச நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டான நாடாக இலங்கை மாறியுள்ளது.

மேலும் சிகரட் மற்றும் புகையிலைகளுக்கான வரியை 90 வீதமாக அதிகரிக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். இதுவரை காலமும் சிகரட்டுக்கான வரி 72 வீதமாகவே இருந்தது. இப்போது அதனை 90வீதமாக அதிகரிக்க நாம் தீர்மானித்துள்ளோம். அதேபோல் சீனி அதிகமாக உள்ள பானங்களுக்கான வரியையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிக வரி அதிகரிப்பு ஒன்று அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இவை நிரந்தரமான வரி அல்ல. எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்த வரி வித்திப்பு மேற்கொள்ளப்படும். அதில் மதுபானங்கள், சிகரட், சீனி அதிகமாக உள்ள பொருட்கள், உப்பு என்பவற்றிற்கு வரி அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். காரணம் இந்த பொருட்களின் மூலமாகவே நாட்டில் மக்கள் அதிகம் நோய்களுக்கு உள்ளாகின்றனர். இன்று பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் சீனிக்கான வரியை அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது. இரத்த பரிசோதனைக்கான வரி நீக்கப்பட வேண்டும், அதேபோல் புற்றுநோய்க்கான மருத்துவ வரியும் குறைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் அக்கறையாக செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு பூராகவும் 900 இலவச இரத்த பரிசோதனை மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

மேலும் ஆயுர்வேத மருத்துவ வில்லைகளின் விலகியும் குறைக்கப்படும். அதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் அதிகளவான ஆயுர்வேத பொருட்கள் அவுஸ்திரேலியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. எனினும் அதிகளவான பணம் செலுத்தி இந்த ஆயுர்வேத வில்லைகளை கொள்வனவுசெய்தோம். எனினும் இப்போது அந்த நிலைமைகளும் மாறியுள்ளது. ஆரம்பத்தில் 30அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்ட ஒரு வில்லை இப்போது 3 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யகூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆண்டுக்குள் முக்கியமான அத்தியாவசிய பொருட்ளின் மற்றும் சேவைகளின் வரி முழுமையாக நீக்கப்படும்.

அத்துடன் பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 10 வரையிலான மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பான இலவச பாட புத்தகங்களை விநியோகிக்கப்படவுள்ளது. அதற்கான  நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சி வழங்கியுள்ளது. அதேபோல் இரத்தத்தில் உள்ள சீனி சோதனை, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பில் இலவசமாக பரிசோதனைகள் பெற்றுக்கொள்ளும் வகையில் சுகாதார வசதிகளை நாம் நாடளாவிய ரீதியில் அமைத்துக்கொடுக்கவுள்ளோம்.

Related posts: