சுகாதார  எச்சரிக்கை இல்லாத சிகரெட்டினை விற்பனை செய்த வர்த்தகர்கள் இருவருக்குத் தண்டம்!

Friday, July 29th, 2016

கீரிமலைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார  எச்சரிக்கை இல்லாத சிகரெட்டினை விற்பனை செய்த வர்த்தகர்கள் இருவருக்குத் தலா- 5000 ரூபா மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.

கீரிமலைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால்  மல்லாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த செவ்வாய்க்கிமை(26) மல்லாகம் நீதிமன்ற நீதவான் ரீ. கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே மேற்படி தண்டத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: