முல்லையில் ஓர் ஆசனத்திற்கு 27 வேட்பாளர்கள் போட்டி!

Wednesday, December 14th, 2016

நடைபெற இருக்கும் இனைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திலிந்து இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாக இருக்கும் நிலையில், 27 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4ஆயிரத்து 276பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் ஆலோசனையி;ன் பிரகாரம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர்களின் குரலை தேசிய மட்டத்தில் ஒலிக்கச் செய்தலையும் முழுமையான அரசியல்வாதிகளை எதிர்காலத்திலே அறிமுகப்படுத்துவதையும் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் குறிக்கோளாகக் கொண்டு 2017ஆம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்ற வேலைத்திட்டத்தினை தேசிய மட்டத்தில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடு முழுவதும் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் 4 மணிவரை  இடம்பெறுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறுகின்றன. இதற்கான வேட்பாளர்களின் வேட்பமனுத்தாக்கல் கடந்த 2ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றன. வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் 28பேர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் நீக்கப்பட்டார். தற்போது 27 வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கென ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் குறித்த 27 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

 vot3

Related posts: