சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு வெற்றி!

Monday, December 18th, 2023

தென்னிந்திய தொலைக்காட்சியான சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.

இம்முறை  லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3  இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கு ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.

இதில் பங்கேற்ற குழந்தைகளின் திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர்.

அதன்படி, இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் கால் பதித்துள்ளதோடு, ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.

இந்த நிலையில், நெற்றையதினம் நடைபெற்ற கிராண்ட் பைனலில் இறுதி முடிவு வெளியாகியுள்ளது.

அதன்படி, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதன் ரன்னராக ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து,  அரங்கம் முழுவதும் அதிர தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் எனக்கு இத்தனை அன்பும் ஆதரவும் தந்த உங்கள் அனைவருக்கும் உங்கள் பிள்ளையாய் என்றும் நான்.. என கில்மிசா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் முதலிடத்தில் வெற்றி பெற்ற கில்மிஷாவுக்கு 10 இலட்சம் ரூபாய் பணிப்பரிசில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: