சீருடை  இல்லாமல் களமிறங்கிய வடக்கு மாகாணம்!

Wednesday, October 19th, 2016

நடப்பு வருட பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட தடகளத் தொடரில் வடமாகாணம் சீருடை இல்லாமல் களமிறங்கியது. கண்டி – போகம்பர விளையாட்டு மைதானத்தில் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான இந்தத்தொடர் 17ஆம் திகதி நிறைவடைந்தது. வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வீரர், வீராங்கனைகளுக்கு என பிரத்தியேகமாக சீருடை வழங்கப்படவில்லை. பதக்கங்களை பெறும்போது அவர்கள் தமது பாடசாலைகளின் பிரத்தியேக சீருடைகளிலேயே சென்று பதக்கங்களை வேண்டினார்கள். பிரத்தியேக சீருடைகள் இல்லாத பாடசாலைகளின் வீரர், வீராங்கனைகளின் நிலை பார்ப்பவர்களுக்கு சிறிது மனக்கசப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

குறித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் கே.சத்தியபாலன் தெரிவிக்கையில் சீருடைகள் தயாரிப்பதுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்காக சம்பந்தப்பட்ட வடக்கு மாகாண அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். எவ்வித நடவடிக்கைகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனாலேயே வடக்கு மாகாணம் பொதுவாகச் சீருடை இல்லாமல் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வடக்கு மாகாணம் மட்டுமல்ல ஊவாமாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியனவும் பிரத்தியேக சீருடைகளைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

20006Under-21-Pole-Vault-J-Anitha-(2)

Related posts: