சீரற்ற காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் -மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி!

Wednesday, November 23rd, 2016

யாழ்.மாவட்டத்தில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறியிருக்கும் மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் கடந்த 20ஆம், 21ஆம் திகதிகளில் இலங்கையிலே அதிகூடிய மழைவீழ்ச்சியாக 138.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி யர்.மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், இந்த வருடம் மொத்தமாக 843.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாவட்டதில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி நேற்றையதினம் ஊடகங்களுக்கு தகவல் தருகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 20ஆம் திகதி , 21ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் யாழ்.மாவட்டத்தில் 138.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இவ்வளவு; மழை வீழ்ச்சி இலங்கையில் வேற மாவட்டங்களில் பதிவு செய்யப்படவில்லை. யாழ்.மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தை மாதம் 01ஆம் திகதி தொடக்கம் நேற்றையதினம் காலை 8.30 மணிவரையில் யாழ்.மாவட்டத்தில் 843.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் தொடர்ந்து சில தினங்களுக்கு கனமழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

viber-image24

Related posts: