சி.ஐ.டியினரே  சுவிஸ் குமாரை அழைத்து சென்றனர்- தாய் தெரிவிப்பு!

Tuesday, May 10th, 2016

தனது மகனை  புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டவர்கள் சிலரே காரில் ஏற்றிச் சென்றதாக சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் தாயார் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிவடைந்ததன் பின்னர் நீதிமன்றுக்கு வெளியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது மகனுக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி எமது வீட்டுக்கு காரில் வந்தவர்கள் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டு எனது மகனை (சுவிஸ் குமார்) காரில் அழைத்துச் சென்றனர்.

பின்னர் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஊருக்கு திரும்பி வந்தால் தாக்குதல் மேற்கொள்வார்கள் என்ற பயத்தினாலையே எனது மகன் கொழுப்புக்கு சென்றார்.

எனது மகன் தப்பி செல்ல வில்லை அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

Related posts: