சில்லறை வியாபாரிகளிடம் வற் வரி அறவிட முடிவு!
Thursday, September 15th, 2016
ஆண்டுதோறும் 50 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான வருவாயை ஈட்டும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வற் வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளுக்கும் 15 சதவிகித வரி அறவிடப்படவுள்ளதாகவும், சீனி அல்லது வேறு இனிப்பு சார் உள்ளீடுகள் சேர்க்கப்பட்ட பால் மாவிற்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளது.
அதேவேளை வானூர்திப் பயணச் சீட்டுகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாகவும், தனியார் சுகாதார சேவைகளுக்கும் இந்த வரி அறவிடப்படவுள்ளதாக அமைச்சரவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
மந்திகை ஆதார மருத்துவமனைக்கு வெளிநோயாளர்களுக்கான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 75 சதவீத நேர்மறை மு...
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழப்பு!
|
|
|


