சில்லறை முறையில் சிகரெட் விற்க விரைவில் தடை!
Thursday, November 24th, 2016
வர்த்தக நிலையங்களில் எதிர்வரும் காலங்களில் சில்லறை முறையில் சிகரெட்டுக்களை விற்பனை செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், plain white சிகரெட் பக்கற்றுக்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது சிகரெட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் 10 யோசனைகள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவின் டி சொய்சாவினால், ராஜித்த சேனாரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts:
சைட்டத்தைப் பாதுகாக்கும் திட்டத்தால் நாட்டுக்கு அழிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவும் அபாயம் – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர் சங்கம் !
மீள் சீரமைக்கப்பட்ட வாகனங்களின் விலையும் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் - இறக்குமதியாளர்கள் சங்...
|
|
|


