சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி!

Monday, March 20th, 2017

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு விசேட அதிரடிப்படையின் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பாதுகாப்பு வழங்கவென விசேட பிரிவு ஒன்றை உருவாக்க சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் மா அதிபரும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றி வரும் தகுதியான உத்தியோகத்தர்களுக்கும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களுக்கும் இந்த விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளது

இந்த ஆண்டில் 800 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். அண்மையில் களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகளை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும் போதான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Related posts:


உறவுகளைத் தேடியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிக முறைப்பாடு - அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப...
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...
இலங்கைக்கான கடன் ஒருங்கிணைப்புக் குழு - இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் இணைவு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...