சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கு அங்கத்தவர்கள் இணைப்பு !

சிறுவர்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்கான அங்கத்தவர்களை கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்திப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுபற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
கிராமத்தில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் பிள்ளைகள் எங்களுடையவர்கள் என்னும் தொனிப்பொருளிலான மக்கள் அரண் தேசிய வேலைத்திட்டம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கிராம மட்டத்தில் பிரதிநிதிகள், இளைஞர்களை ஒரு குழுவாக இணைத்து சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 5 பிரதிநிதிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.
நாட்டில் உள்ள 14 ஆயிரத்து 22 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து மொத்தமாக 70 ஆயிரத்து 110 பேர் சிறுவர் பாதுகாப்பு தொண்டர்களை இணைத்துக் கொள்ளப்பட உள்ளார்கள்.
உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து 5 பேர் அடிப்படையில் மொத்தமாக 2 ஆயிரத்து 175 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
சிறுவர் பாதுகாப்பு தொண்டர் படையில் இணைய விரும்பும் இளையோர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் விண்ணப்பப்படிவங்களை பிரதேச செயலக பிரதே
ச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், அல்லது கிராம மட்ட உத்தியோகத்தர்களிடம் பெற்று விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அபிவிருத்தி பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
|
|