சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை.!
Saturday, October 1st, 2016
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றை பார்வையிடுவதற்கு சிறுவர்களுக்கு இலவச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
இதற்கமைய 12 வயதுக்கு கீழ்பட்ட அனைத்து சிறுவர்களும் இலவசமாக இதனைப் பார்வையிடலாம் என வனஜீவராசிகள் பதில் அமைச்சர் அனோமா ஜீ.சுமேதா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய விலங்கியல் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் குறித்த இடங்களில் சிறுவர்களுக்கான பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விலங்கியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய காலை 8.30 முதல் மாலை நான்கு மணிவரை வெவ்வேறு வகையான விளையாட்டு, கேளிக்கை நிகழ்வுகள் பின்னவல மற்றும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளதாகவும் இதில் பங்குபெறும் சிறுவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
|
|
|


