சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசம்!
Wednesday, September 16th, 2020
இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான யோசனை நீதியமைச்சர் அலி சப்ரியினால் இன்று கூடவுள்ள அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது இருக்கின்ற சட்டத்தின்படி 16 வயதுவரை உள்ளவர்கள் சிறுவர்களாகவே கணிக்கப்படுகின்றனர்.
இளைஞர் வட்டத்திற்குள் நுழைவதற்கு 16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் புதிய யோசனைப்படி 16 வயது என்கிற வரையறை 18ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கின் முதல்வருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
கலைஞர் கருணாநிதி காலமானார்!
ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக...
|
|
|


