சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் – குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !

Wednesday, December 19th, 2018

ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அவதானிக்கும் தன்மை என்பவை அதிகளவில் உள்ளன.

இந்த வயதில் வழங்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளையும் அவதானித்து அதன்படி நடக்கும் ஆற்றல் சிறார்களுக்கு உண்டு. இந்த வயதில் பெற்றோர் சிறந்த விடயங்களை தமது பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் பத்மபிரியா தரணிதரன் தெரிவித்தார்.

சிறார்களுக்கு 5 வயதுக்குட்பட்ட காலப்பகுதியில் ஊட்டப்படும் கல்வியானது அவர்களின் மனதில் ஆழப்பதிந்து விடும். அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குப் பெரிதும் கைகொடுக்கின்றது. சிறுவயதில் கல்வி தொடர்பான அடிப்படை அறிவை ஊட்டுவதற்காகவே பாலர் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு அடிப்படைக் கல்வி போதிக்கப்படுகின்றது.

அடிப்படைக் கல்வியுடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் பாலர் பாடசாலைகளில் ஊட்டப்படுகின்றன.

Related posts: