சிறுமி ஜெகதீஸ்வரன் அஜந்தாவின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி!

Monday, September 12th, 2016

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட அஜந்தாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் ஆனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

நேற்றுநடைபெற்ற குறித்த சிறுமியின் இறுதிச்சடங்கில் செயலாளர் நாயகத்தின் திருகோணமலை மாவட்ட கட்சியின் விசேட பிரதிநிதியான புஸ்பராசாவின் ஏற்பாட்டில் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியூடாக சிறுமியின் பேற்றோருக்கு தமது ஆனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

திருகோணமலை நல்லூர் – நீலாக்கேணியில் உள்ள சிறுமியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் பூதவுடலுக்கு கட்சியின் மாவட்ட விசேட பிரதிநிதியான புஸ்பராசா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

image-0-02-01-bed0e729becd42f82bf279deba39b961975e57eba664338dfbc7748f379e49be-V (1)

Related posts:


கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய...
மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள...
நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்கின்றது - மத்திய வங்கியின் அறிவிப்பு!