சிறுதானிய பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்!
Tuesday, April 10th, 2018
தென்மராட்சி தெற்கு மறவன்புலவு கமக்கார அமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு மறவன்புலவு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு பெரும்பாக அலுவலர் மற்றும் கிராம அலுவலர் போன்றோர் கலந்து கொள்ள இருப்பதால் பிரதேசத்தில் சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கமக்கார அமைப்பின் தலைவர் சி.திருஞானசம்பந்தர் அறிவித்துள்ளார். இதேவேளை சிறுதானியப் பயிர் அழிவு தொடர்பான பதிவுகளும் இடம்பெற்று வருகிறதெனவும் தெரிவித்தார்.
Related posts:
வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை - ஐ.நா எச்சரிக்கை
பாடசாலை மாணவர்களின் கை, கால்களை மறைப்பதற்கு புதிய ஆடை - கல்வி அமைச்சு அவதானம்!
அரச பாடசாலை ஆசிரியர்களால் நடத்தப்படும் தனியார் வகுப்புகளில் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மாணவர்களை இண...
|
|
|


